மதுரை மக்களவைத் தொகுதி

வருகிற மக்களவைத் தேர்தலில் மதுரை மக்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது.

மதுரை மக்களவைத் தொகுதி
மதுரை
  • News18
  • Last Updated: March 15, 2019, 5:01 PM IST
  • Share this:
மதுரை சித்திரைத் திருவிழா அன்று தேர்தல் நடத்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழல் மதுரை மக்களவைத் தொகுதியில்தான் ஏற்பட்டது.

1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை மக்களவைத் தொகுதியில் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கக்கன் வெற்றி பெற்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சி 8 முறை மதுரை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மறைந்த தி.மு.க தலைவரின் மூத்த மகன் மு.க. அழகிரி போட்டியிட்டு 4,31,295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


இறுதியாக நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அழகிரி போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக திமுக சார்பில் களமிறக்கப்பட்ட வ. வேலுச்சாமி 2,56,731 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

1952-ம் ஆண்டு முதல் மதுரை மக்களவைத் தொகுதியை கைப்பற்ற முடியாமல் தவித்து வந்த அ.தி.மு.க 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 4,54,167 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட சிவமுத்துகுமார் 1,47,300 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் பாரத் நாச்சியப்பன் 32,143 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர்.2009-ம் ஆண்டு நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலில் 77.48% பதிவான வாக்குகள். 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அதிரடியாக 9.60% சரிந்து 67.88% வாக்குகள் மட்டுமே பதிவாகின.

வருகிற மக்களவைத் தேர்தலில் மதுரை மக்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்