மதுக்கடையில் குவிந்த குடிமகன்கள்; கெஞ்சி கூத்தாடிய பேரூராட்சி அதிகாரிகள்

மதுரை அலங்காநல்லூரில் கொரோனா அச்சத்தையும் மீறி மதுக்கடையில் குடிமகன்கள் குவிந்து வருகின்றனர்.

மதுரை அலங்காநல்லூரில் கொரோனா அச்சத்தையும் மீறி மதுக்கடையில் குடிமகன்கள் குவிந்து வருகின்றனர்.

  • Share this:
மதுரை நகர் உள்ளிட்ட குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தி இருக்கும் நிலையில் அப்பகுதிகள் அனைத்திலும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல, எல்லையோர கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக ஊரடங்கு தளர்வு உள்ள அலங்காநல்லூர் பகுதிகளில் போலீஸ் கெடுபிடிகளையும் மீறி மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கான குடிமகன்கள் குவிந்து இருப்பதால் ஒலிப்பெருக்கியுடன் அங்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள் அவர்களைக் கலைந்து செல்லுமாறு கெஞ்சி வருகின்றனர். இருப்பினும் மதுப் பிரியர்கள் அதை கண்டுகொள்ளாமல் திரண்டு வருவதால் அவர்களை ஒழுங்குபடுத்த வழிநெடுகிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Also see:

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அனைவருக்கும் மது கிடைக்கும் வகையில் நபர் ஒருவருக்கு நான்கு குவாட்டர் பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும் என டாஸ்மாக் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். வெயில் கொளுத்தி வரும் நிலையில், அதைக்கூட பொருட்படுத்தாமல் மதுபானங்களை வாங்க கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறது.
Published by:Rizwan
First published: