மதுரை: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானபாட்டில்கள் கொள்ளை...!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானபாட்டில்கள் கொள்ளை

டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பின் டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என அச்சப்படுகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் விற்பனை முடித்தபின் நேற்று இரவு 10.30 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை டாஸ்மாக் ஊழியர் கடையை திறந்து பார்த்த பொழுது கடையிலிருந்து 237 மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்க பட்டதும் அதன் மொத்த மதிப்பு 45,000 ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது.

Also read... அமலா பாலுடன் நிச்சயதார்த்தத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட முன்னாள் நண்பருக்கு தடை..உடனே சம்பவம் குறித்து டாஸ்மார்க் மேற்பார்வையாளர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்பார்வையாளர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பின் டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என அச்சப்படுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: