நில அளவீட்டுப் பணியை 30 நாட்களில் முடிக்கவில்லை எனில் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை உயர் நீதிமன்றம்

பணம் செலுத்தியதில் இருந்து 30 நாட்களில் நில அளவீடு செய்ய தவறினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  நில அளவையின் போது அருகில் உள்ள நில உரிமையாளரின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என  மதுரையை சேர்ந்த ஆசைத்தம்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிள அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு கட்டணம் செலுத்தியும் பல மாதங்களாக நில அளவீடு செய்யாமல் தாமதிக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, 30 நாட்களுக்குள் நில அளவீடு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்டவருக்கு கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்றார்.

  இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் 2500 ரூபாய் பிடித்தம் செய்வதோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

  மேலுக் படிக்க...தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது சில ஊழல் அதிகாரிகளால் களங்கம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த நீதிபதி, நிள அளவை பணியை ட்ரோன் மூலம் கண்காணிக்கவும், அதை பதிவு செய்யவும் தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
  Published by:Vaijayanthi S
  First published: