Home /News /tamil-nadu /

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு - நீதிமன்றம் ஆணை

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு - நீதிமன்றம் ஆணை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரசு அலுவலகங்களில் பல அரசு ஊழியர்கள் கைத்தொலைபேசி மற்றும் கேமரா மூலம் சக அலுவலக பணியாளர்களை வீடியோ எடுப்பது  பெரும் வியப்பை அளிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973ன்படி அரசு அலுவலகங்களில் செல்போன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதையும் அரசு உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
அரசு பணியாளர்கள் அலுவலக நேரங்களிலும், அலுவலக வளாகத்தினுள் மொபைல் போன்கள் மற்றும் மொபைல் கேமராக்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் வகையில்தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள சுகாதாரத்துறையில்  அனைத்து துணை அலுவலர்கள் , அதிகாரிகளுக்கு தகுந்த சுற்றறிக்கை , அறிவுறுத்தல்களை வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி  சுகாதாரத்துறை  பிராந்திய பணிமனையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து  வரும் D.S.ராதிகா,  அலுவலகத்தில் செல்போனை பயண்படுத்தி சக ஊழியர்களை வீடியோ எடுத்தது தொடர்பான புகாரில் கடந்த ஜனவரி மாதம் சுகாதாரத்துறை அதிகாரிகளால்  பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.  இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அவர்  மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி S.M. சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர்,   மனுதாரர் மீது கையாடல் மற்றும் துறையின் மற்ற அதிகாரிகளிடம் அலட்சியமாக நடந்துகொண்டது போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  மனுதாரர் மீது  அலுவலக ரீதியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த நீதிமன்றம் விசாரணை நடத்த இயலாது.  விசாரணையின் போது அவை அனைத்தும் ஒழுங்குமுறை ஆணையத்தால் விசாரிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், தகுதிவாய்ந்த அதிகாரி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும்,  அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் சொந்த பயன்பாட்டிற்காக,  அழைபேசிகளை  பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது.    அலுவலகத்திற்குள் செல்போன்களைப் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் மிகப்பெரிய தவறான நடத்தையாகும்.
அரசுத் துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

இதையும் படிங்க: 21 தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


.ஏதேனும் சொந்த விசயமாக  அவசர அழைப்புக்கு வர வேண்டுமானால், அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லவும், மொபைல் போன்களை பயன்படுத்தவும் மேலதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.சொந்த , மொபைல் போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட வேண்டும் அல்லது vibration,  silent mode ல்  வைத்திருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச ஒழுக்கமாக இது இருக்க வேண்டும் என்று கூறினார்.

அலுவலகத்திற்குள் மொபைல் கேமராக்களை அடிக்கடி பயன்படுத்துவதாகக் கூறப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகள் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்த நீதிபதி,   ‘இந்த விசயத்தை தீவிரமாகக், அரசு  கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது, அலுவலகத்திற்குள் நுழையும்போது அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த மொபைல் போனை பொதுவான அலமாரியில் வைக்க வேண்டும் மற்றும் அவசர அழைப்புகளுக்கு, அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ எண்களைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க: நியூஸ்18 செய்தி எதிரொலி: குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற மாவட்ட ஆட்சியர்... வீடு கட்டித் தருவதாகவும் உறுதி


அலுவலகத்திற்குள் எவ்வித தடையுமின்றி மொபைல் போன் பயன்படுத்த அனுமதித்தாலோ அல்லது அலுவலகத்திற்குள் மொபைல் கேமராக்களை பயன்படுத்த அனுமதித்தாலோ, அது அனைத்து ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தற்போது உள்ள சூழ்நிலையை  கருத்தில்  கொண்டு,  அரசு அலுவலகங்களில் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து கீழ்நிலை அதிகாரிகளுக்கும் தகுந்த சுற்றறிக்கை / அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் . அலுவலக நேரத்தில் அரசு பணியாளர்கள் சொந்த  மொபைல் போன்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் ‘ என்று கூறினார்.

அரசு அலுவலகங்களில் பல அரசு ஊழியர்கள் கைத்தொலைபேசி மற்றும் கேமரா மூலம் சக அலுவலக பணியாளர்களை வீடியோ எடுப்பது  பெரும் வியப்பை அளிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி,  அலுவலக நேரத்தில்  சொந்த செல்போனில் பேசுவது  தொடர்பான ஒழுக்கமின்மையும், முறைகேடும் தொடர அனுமதித்தால், வரி செலுத்துவோரின் பணத்தைப் பெற்று இயங்கும் அரசு அலுவலகங்கள்  பொதுமக்களுக்கு மிகப் பெரிய பாவத்தைச் செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறினார்.

மேலும் படிக்க: பதவி உயர்வுக்காக ஊழியர்களிடம் தலா ரூ.5 லட்சம் லஞ்சம்: போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்- லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி


தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973ன்படி அரசு அலுவலகங்களில் செல்போன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதையும் அரசு உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், தமிழக சுகாதாரத்துறையில் உள்ள அரசு பணியாளர்கள் அலுவலக நேரங்களிலும், அலுவலக வளாகத்தினுள் மொபைல் போன்கள் மற்றும் மொபைல் கேமராக்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துணை அலுவலர்கள் , அதிகாரிகளுக்கு தகுந்த சுற்றறிக்கை , அறிவுறுத்தல்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையும் மீறி  வழிகாட்டுதல்களை  மீறினால், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973ன் கீழ்  அந்த பணியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Published by:Murugesh M
First published:

Tags: Government officers, Mobile phone

அடுத்த செய்தி