ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரிசாட்களின் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உடனடியாக அகற்ற உத்தரவு.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

ரிசாட்களின் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உடனடியாக அகற்ற உத்தரவு.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

மாதிரி படம்

மாதிரி படம்

மேற்கு தொடர்ச்சி மலையில் , தனியார் ரிசார்ட்களின் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உடனடியாக அகற்றி சீல் வைக்க  மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நெல்லை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் தாக்கல் செய்த மனுவில்,  மலைத்தொடர்களுக்குள்ளேயே உருவாகிய ஓடை,  ஆறு  தெளிவாகவும், தூய்மையாகவும், எந்த மாசுபாடும் அற்றதாகவும் இருக்கிறது.  இந்த நீரோடைகள் பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளன. நீரோடைகள், ஆறுகள் சில இடங்களில் ஒன்றிணைந்து இயற்கையிலேயே  நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகின்றன. இந்த நீர் வீழ்ச்சிகள், 1000 வருட புவியியல் மாற்றங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இயற்கையின் அதிசயம்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் கீழ் வருவாய்த் துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.

அதிக பார்வையாளர்களின் தேவை காரணமாக, மாவட்டத்தில் தனியார் ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் போன்றவை அமைக்கத் தொடங்கின.  இந்த ரிசார்ட்கள் அனைத்தும் அறைகள், உணவு போன்ற கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சேவைகளை வழங்குகின்றன.

ALSO READ | நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் 33000 விவசாயிகள் பயிர்க்காப்பீடு!

மலை பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள தனியார் ரிசார்ட்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீரோடைகளின் இயற்கை வழிதடத்தை திருப்பி , தங்கள் ரிசார்ட்டுகளில் திருப்பி செயற்கை நீரூற்றுகளை உருவாக்கி வணிக நோக்கில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கை நீர் வீழ்ச்சிகளை  உருவாக்க பல ஆண்டுகளாக புவியியல் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், இந்த மக்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் நீரின் இயற்கையான ஓட்டத்தின் போக்கை மாற்றுகிறார்கள் மற்றும் அவர்கள் இல்லாத இடங்களில் சட்டவிரோதமாக இதுபோன்ற செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறார்கள்.

எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஓடை, ஆறு மற்றும் ஓடையின் இயற்கை  ஓட்டத்தை மீட்டெடுத்து சுற்று சூழலை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் R.மகாதேவன்,  J.சத்தியநாராயணா பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது, தென்காசி,  கன்னியாகுமாரி,  ஊட்டி மாவட்ட ஆட்சியர்கள்,  மேற்கு தொடர்ச்சி வன பகுதியில்   உள்ள அந்தந்த வன பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இயற்கை நீரோட்டத்தின் வழிதடத்தை திருப்பி , தனியார் ரிசார்ட் அமைப்புகள்,   செயற்கை நீர் வீழ்ச்சியை உருவாக்கியிருந்தால் அந்த நபர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தென்காசி,  கன்னியாகுமாரி,  ஊட்டி மாவட்ட ஆட்சியர்கள்,  அந்ததந்த மாவட்ட வன அலுவலர் கொண்ட  குழு அமைத்து, உடனடியாக வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு , மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், இயற்கை நீர் வழி பாதையை திருப்பி செயற்கை நீர் வீழ்ச்சிகள் ஏற்படுத்தியிருந்தால் உடனடியாக அகற்றி, சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை டிச.1 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Falls, Kutralam hotel, Madurai High Court