ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உயர் நீதிமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா - நீதிபதிகள் மலர்தூவி மரியாதை

உயர் நீதிமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா - நீதிபதிகள் மலர்தூவி மரியாதை

காந்தியடிகள் 150-வது பிறந்தநாள் விழா

காந்தியடிகள் 150-வது பிறந்தநாள் விழா

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தேசத்தந்தை காந்தியடிகளின் 150 - ஆண்டு பிறந்தநாள் விழா உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நீதிமன்ற பிரதான வாயிலில் உள்ள தேசதந்தை மகாத்மாவின் உருவ சிலைக்கு நிர்வாக நீதிபதி சிவஞானம் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ், எம்.சுந்தர், தாரணி , வைத்தியநாதன், மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்களும் காந்தியடிகள் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து ரத்த தான முகாம், காதி பொருட்கள் கண்காட்சி, மரக்கன்று நடும் விழா, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் நீதிமன்ற வளாகத்தை தூய்மை படுத்தும் தூய்மை பணி நிகழ்வுகள் நடைபெற்றது.

வீடியோ பார்க்க: நீட் ஆள் மாறாட்ட புகாரில் சிக்கியுள்ள மாணவர் இர்பானின் தந்தையும் போலி மருத்துவர்!

First published:

Tags: Gandhi Jayanti