ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பகல் 2 மணி முதல் இரவு 8 வரை.. டாஸ்மாக் நேரத்தை ஏன் மாற்றக்கூடாது - நீதிமன்றம் கேள்வி!

பகல் 2 மணி முதல் இரவு 8 வரை.. டாஸ்மாக் நேரத்தை ஏன் மாற்றக்கூடாது - நீதிமன்றம் கேள்வி!

மாதிரி படம்

மாதிரி படம்

மது விற்பனை நேர குறைப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து  தமிழக அரசு பதிலளித்த உத்தரவு

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Tamil Nadu

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என  ஏன்  குறைக்க கூடாது என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுக்களில், தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும், டாஸ்மாக் மூலம்  மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும்.

மது விற்பனை நேரத்தை நண்பகல்  2 மணி முதல் இரவு  8 மணி வரை என குறைத்து  உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் R. மகாதேவன், J. சத்தியநாராயண பிரசாத் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் தமிழகத்தில் தான் குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. அரசுத்தரப்பில், மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கால கட்டத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. அப்போது, பிற பக்கத்து மாநிலங்களிலிருந்து மது வாங்கி வந்து குடித்தனர். எனவே முற்றிலும் மது விற்பனை தடை என்பது  சாத்தியமில்லை.

இதையும் படிங்க | மதுரை மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கியமான தொலைபேசி எண்கள்

மது பழக்கம் உள்ளவர்கள்  மாற்றுவழியையே யோசிக்கின்றனர். 21 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்,  பள்ளி மாணவர்களுக்கு  மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட  நீதிபதிகள்,  மது விற்பனையில் தமிழகமே பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது. மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைக்க தமிழக அரசு ஏன் பரிசீலனை செய்யக்கூடாது என்றும், கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதில்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், டாஸ்மாக் மூலம் மதுவிற்பனையை ஆன்லைன் மூலம் வழங்குவது சாத்தியமில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக் மது விற்பனையை ஒழுங்குபடுத்துவது, முறைகேடுகளை தடுப்பது, விற்பனை நேர குறைப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து  தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

First published:

Tags: Local News, Madurai High Court, Tasmac