ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதியம் 2 மணி முதல் 8 மணி வரை.. டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க தமிழ்நாடு அரசுக்கு கோர்ட் பரிந்துரை

மதியம் 2 மணி முதல் 8 மணி வரை.. டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க தமிழ்நாடு அரசுக்கு கோர்ட் பரிந்துரை

டாஸ்மாக் - மதுரை உயர்நீதிமன்றம் கிளை

டாஸ்மாக் - மதுரை உயர்நீதிமன்றம் கிளை

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் பொதுநலன் கருதி அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை நண்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரையாக குறைக்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்ய தடைவிதிக்கவும் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை கே.கே.ரமேஷ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்ரு தெரிவித்தனர். எனினும், பொதுநலன் கருதி அரசுக்கு பரிந்துரைகளை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். இதன்படி, டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை நண்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரை இருக்குமாறு மாற்றலாம் என்று தெரிவித்தனர். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். மதுபாட்டில்களில் உள்ள லேபிளில் விலைப் பட்டியல் மற்றும் தயாரிப்பு குறித்து குறைகள் இருந்தால், அதனை தெரிவிக்க முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை லேபிளில் அச்சிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

மதுபானங்களை விற்பனை செய்யவும், வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் உரிமம் வழங்கும் முறையை உருவாக்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: Madurai High Court, Tamil Nadu, Tasmac