ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற வழக்கில் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற சுகாதார நல்வாழ்வு முகாமிற்கு பைக்கில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியவில்லையாம்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 10:58 PM IST
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற வழக்கில் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
அமைச்சர் விஜயபாஸ்கர்
Web Desk | news18
Updated: December 6, 2018, 10:58 PM IST
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதாக தொடரப்பட்ட  வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், அவர் கூறியிருந்தாவது: சர்கார் பட விவகாரம் தொடர்பாக மதுரை திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற சுகாதார நல்வாழ்வு முகாமிற்கு பைக்கில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியவில்லை.

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Also watch
Loading...
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...