மதுரையில் தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை...!

பொது நலன் என்ற பெயரில் வழக்கு தொடர்வதையே வாடிக்கையாகக் கொண்டு, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் மனுதாரருக்கு, அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மதுரையில் தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை...!
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • News18
  • Last Updated: April 15, 2019, 3:39 PM IST
  • Share this:
பணபட்டுவாடா நடைபெறுவதால், மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதுடன், பரிசுப் பொருட்களையும் வழங்குகின்றனர். அதனால், இந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பண பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


பொது நலன் என்ற பெயரில் வழக்கு தொடர்வதையே வாடிக்கையாகக் கொண்டு, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் மனுதாரருக்கு, அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை அடுத்து, அபராதம் விதிக்காமல், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்