• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 2021-க்குள் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

2021-க்குள் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக்

டாஸ்மாக்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பார்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆளும் அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையின் படி 2021ம் ஆண்டுக்குள் அனைத்து அரசு மதுபானக்கடைகளும் மூடப்படுமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த பொது நல வழக்கில், தஞ்சை பள்ளியக்கரஹாரம் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட அரசு மதுபானக்கடையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அந்த கடை அமைய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு ஆஜரான டாஸ்மாக்கின் மேலாண் இயக்குநர், 2 கட்டங்களாக 1000 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 21 வயதிற்கு மேற்பட்டவர் என்பதற்கான சான்றை சரிபார்க்கவும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மது விலை உயர்வால்தான், கடந்த ஆண்டு 30,000 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாகவும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த நேரம்தான் மதுக்கடைகள் திறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு தமிழகத்தில்தான் அதிக குடிநோயாளிகள் இருப்பதாக கூறிய நீதிபதிகள், ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையின் படி 2021-ம் ஆண்டுக்குள் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுமா? என கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பார்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் எத்தனை மனமகிழ் மன்றங்கள் உள்ளன? டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see...  ஈஷா மையத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சிவராத்திரி வழிபாடு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: