அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற அமமுக வேட்பாளர் கதிர்காமு விசாரணையில், முன்ஜாமின் வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 13, 2019, 9:20 AM IST
அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்!
அமமுக வேட்பாளர் கதிர்காமு
Web Desk | news18
Updated: April 13, 2019, 9:20 AM IST
பாலியல் புகார் வழக்கில் பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிகிச்சைக்கு வந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த மருத்துவர் கதிர்காமு மீது கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிர்காமு தாக்கல் செய்த மனுவில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பெரியகுளம் இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதால், அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க தடை விதித்து முன்ஜாமின் வழங்க வேண்டுமென கதிர்காமு கோரினார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற விசாரணையில், முன்ஜாமின் வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் பிரசாரம் செய்ய வேண்டியுள்ள நேரத்தில், போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கதிர்காமுவிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், தேர்தலுக்கு பின் போலீசார் விசாரணைக்கு கதிர்காமு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Also see... ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகம் பாலைவனமாகிவிடும் - எடப்பாடி பழனிசாமி பிரசாரம் 

காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! 

Also see... தமிழர்களை மோடிக்கு எதிராக திருப்புகிறாரா ராகுல் காந்தி?


Also see.... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...