Home /News /tamil-nadu /

தமிழகத்தில் பணியாற்ற விருப்பமில்லையா.. ரூ.50 லட்சம் இழப்பீடு செலுத்துங்க - கேரள மருத்துவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் பணியாற்ற விருப்பமில்லையா.. ரூ.50 லட்சம் இழப்பீடு செலுத்துங்க - கேரள மருத்துவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

Madurai High Court Bench : வெளி மாநிலமான கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது அரசு நிர்ணயித்துள்ள 50 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ் (MBBS) முடித்த பிறகு, வெளி மாநிலத்தை  சேர்ந்தவர்  அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டின் கீழ் மேல் படிப்புகளை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்தால், மாநில அரசின் கட்டாய பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அல்லது இழப்பீட்டுத் தொகையாக  50 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் எம்.பி.பி.எஸ். (MBBS) முடித்த பிறகு, நெல்லை மருத்துவக் கல்லூரியில் டிப்ளோமா (DIPLOMO MEDICENE - DM  NEURO) மருத்துவம் பயின்றேன். அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் தமிழகத்தில் படித்ததால், ஒப்பந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது இரண்டு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று, எனக்கு  நெல்லை மருத்துவ கல்லூரி நிர்வாகம் அனுப்பிய  நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும், என்று  கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கேரளாவைச் சேர்ந்தவர். நெல்லை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறையில் உயர்படிப்பான  DIPLOMO- DM பயில அகில இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்துள்ளது.

2020 செப்டம்பர் மாதம் படிப்பு முடிந்த நிலையில், படிப்பில் சேரும் போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 10 ஆண்டுகள் தமிழக அரசுக்கு கீழ் பணியாற்ற வேண்டும். அல்லது இரண்டு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், மனுதாரர் பணியில் சேர தவறியதால் நெல்லை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கடந்த 2001 செப்டம்பர் 20ஆம் தேதி மனுதாரரை 2 கோடி செலுத்துமாறு கூறியுள்ளார்.

அது தொடர்பாக மனுதாரர் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாத நிலையில்,  இழப்பீடு தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்யுமாறு மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், அரசு மருத்துவ மனையில் சேர்வதற்கான பணியிடம் தொடர்பான கவுன்சிலிங்கில் மனுதாரர் கலந்து கொள்ளவில்லை.

தமிழக அரசு ஒப்பந்தத்தை 10 ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகவும், தொகையை 50 லட்சமாகவும் குறைந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய பணி ஒப்பந்தங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை ஒரேமாதிரியாக நிர்ணயம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா முழுவதும் கட்டாய பணி தொடர்பான ஒப்பந்தங்களில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் மனுதாரர் ஆஜராகவில்லை. மனுதாரருக்கு நாகப்பட்டினத்தில் துணை அறுவை சிகிச்சை மருத்துவராக பணி வழங்கப்பட்டு, நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தபோதும் மனுதாரர் பணியாற்ற தயாராக இல்லை.

Must Read :  சர்ச்சை ஆடியோ.. மிமிக்ரி என மறுக்கும் பொன்னையன்.. அடித்து சொல்லும் நிர்வாகி - ஆட்டம் காட்டும் ஆடியோ விவகாரம்

மனுதாரர் தரப்பில், மனுதாரர் தமிழ் மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் தொடர்ச்சியாக தமிழகத்தில் பணியாற்ற விரும்பவில்லை. ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது அரசு நிர்ணயித்துள்ள 50 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Doctor, Madurai, Madurai High Court

அடுத்த செய்தி