முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக மட்டும் இருப்பதை ஏற்கமுடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி..

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக மட்டும் இருப்பதை ஏற்கமுடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி..

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சிதையாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் தமிழ் மொழியை படிப்பது அடிப்படை உரிமை எனக் கூறினர்.

  • Last Updated :

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக மட்டும் இருப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 2 வரை தமிழ் விருப்பப்பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், தமிழாசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும், பொன்குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் N. கிருபாகரன், B.புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடமாக மட்டும் இருப்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனர்.

Also read... சென்னையில் உள்ள 39,000 தெருக்களில் 58 தெருக்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது - அமைச்சர் வேலுமணி..

top videos

    ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சிதையாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் தமிழ் மொழியை படிப்பது அடிப்படை உரிமை எனக் கூறினர். இதையடுத்து, விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    First published:

    Tags: Hindi, Kendriya vidyalaya, Kendriya vidyalaya school, Madurai High Court, Tamil language