கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க மத்தியரசு சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை? உயர் நீதிமன்றம் கேள்வி

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து மத்திய சித்தா ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க மத்தியரசு சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை? உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை உயர் நீதிமன்றம்
  • News18
  • Last Updated: October 15, 2020, 5:58 PM IST
  • Share this:
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனாவுக்கு 66 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சித்த மருத்துவ மருந்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி முடிவு அறிவிக்க மத்திய ஆயுஷ் அமைச்சககத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் சித்தா ஆராய்ச்சி மையம் என்னென்ன ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது? என்னென்ன நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், கொரோனா நோயாளிகளுக்கும், முன் கள பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது என்று கேட்டனர்.


Also read... தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய காவலர்.. குவியும் பொதுமக்களின் பாராட்டு..

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து மத்திய சித்தா ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading