12 வாரங்களுக்குள் குடிமராமத்து பணிகளுக்கு தனி இணையதளம் - அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

கோப்புப் படம்

கண்மாய், குளம், ஊரணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் குடி மராமத்து பணிகளுக்கான திட்ட மதிப்பீடு , பணி தொடங்கி, முடிக்கப்பட்ட நாள், பரப்பு உள்ளிட்ட தகவல்களை , பணிக்கு முன், பின் என புகைபடத்துடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    12 வாரங்களுக்குள் குடிமராமத்து பணிகளுக்கு என தனி இணையதளம் தொடங்கி அனைத்து விவரங்களையும் அதில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு நீதிபதிகள். சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிமராமத்து பணிகள் பொதுப் பயன்பாட்டிற்கானது என குறிப்பிட்ட நீதிபதிகள், அதில் ரகசியம் தேவை இல்லை எனவும், முறைகேடுகளை களைய வெளிப்படைதன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

    Also read... பகுதிநேர ஆசிரியர்களைச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

    தொடர்ந்து, கண்மாய், குளம், ஊரணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் குடி மராமத்து பணிகளுக்கான திட்ட மதிப்பீடு , பணி தொடங்கி, முடிக்கப்பட்ட நாள், பரப்பு உள்ளிட்ட தகவல்களை , பணிக்கு முன், பின் என புகைபடத்துடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: