வரும் காலங்களில் இப்படி பேசக்கூடாது... பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

news18
Updated: June 25, 2019, 5:14 PM IST
வரும் காலங்களில் இப்படி பேசக்கூடாது... பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
பா.ரஞ்சித்
news18
Updated: June 25, 2019, 5:14 PM IST
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார்.

அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜராஜ சோழன் குறித்துப் பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் பா.ரஞ்சித்.

அதில், பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே நான் அப்படிப் பேசினேன். இந்தத் தகவலை பலரும் பேசியுள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

கடந்த 13-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் 21-ம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இனி வரும் காலங்களில் இயக்குநர் பா.ரஞ்சித், இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது. அவ்வாறு பேசினால், தொடர்புடைய கீழமை நீதிமன்றம் அவரது முன் ஜாமினை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading...
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் பா.ரஞ்சித் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிப்பதோடு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “பேச்சு உரிமை, உள்ளது. ஆனால் இரு தரப்பிடையே அமைதியின்மையை ஏற்படுத்த கூடாது என்ற சட்டம் உள்ளது.

தலித் மக்களின் நிலங்களை ராஜராஜசோழன் அபகரித்து கொண்டான் என்று கூறியதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?பொதுவான கருத்துகளைக் கூற வேண்டாம்?  பேசியதன் உள் நோக்கம் என்ன? அதற்கான ஆதாரங்களை கொடுங்கள்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை ஜுலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

வீடியோ பார்க்க: இரவில் தாயுடன் தூங்கிய இரண்டரை வயது குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்த கொடுமை!

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...