ரம்ஜான் தினத்தன்று சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி...!

ரம்ஜான் தினத்தன்று சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி...!
உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • Share this:
ரம்ஜான் தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தனிமனித இடைவெளியுடன் சிறப்புத் தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை வில்லாபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தொடர்ந்த வழக்கில், வருகிற 25ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறப்புத் தொழுகை நடத்த அனுமதி கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் இந்த கோரிக்கை ஏற்புடையது அல்ல எனவும் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading