Home /News /tamil-nadu /

டிக்-டாக் போன்ற செயலிகளை தடைசெய்யுமா அரசு? அறிவுறுத்திய உயர்நீதிமன்றம்

டிக்-டாக் போன்ற செயலிகளை தடைசெய்யுமா அரசு? அறிவுறுத்திய உயர்நீதிமன்றம்

டிக் - டாக்

டிக் - டாக்

TikTok app | டிக் டோக் வீடியோ செயலிக்கு தடை விதிப்பது குறித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்யவும் அதன் வீடியோக்களை ஊடகங்களில் ஒளிப்பரப்பவும் மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் மக்களுக்குத் தெரியாமல் அவர்களை கிண்டலடித்து கேலிக்குள்ளாக்கும் பிராங்க் நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், கிருபாகரன் அமர்வு முன்பு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் இதுபோன்ற பிராங்க் நிகழ்ச்சிகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர்.

இதனால் குழந்தைகள் மற்றும் பெண்களின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிப்பதற்கு நீதிமன்ற உத்தரவு வரும் வரை அரசு காத்திருக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர்.

பிராங்க் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, டிக்-டோக் போன்ற வீடியோ செயலிகளுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இதற்கு தடை இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும் டிக் டோக் வீடியோ செயலிக்கு தடை விதிப்பது குறித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Also see... 

Also read... தேர்தல் அறிக்கை மூலமாக தேசத்தை பிரிக்கிறாரா ராகுல் காந்தி? 





சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.










தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

ன்ஃப்க்ஹ்ன்hgdfghg

SCHEDULE TIME TABLE:
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai High Court, Tik Tok

அடுத்த செய்தி