• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரேஷன் கடையில் மலிவு விலையில் தரப்பட்ட மளிகைப் பொருட்கள் தேக்கம் - காரணம் என்ன?

ரேஷன் கடையில் மலிவு விலையில் தரப்பட்ட மளிகைப் பொருட்கள் தேக்கம் - காரணம் என்ன?

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரானா கால பேரிடரில், ரேசன் கடைகளில் மலிவு விலையில் பலசரக்கு உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால், தேக்கமடைந்து கெட்டுப்போய் விட்டதாக புகார் எழுந்திருக்கிறது.

  • Share this:
    கொரோனா ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் எளிதில் கிடைக்கும் விதமாக ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் விநியோகிக்கப்பட்டன. அதன்படி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வத்தல், சமையல் எண்ணெய், மிளகு, மல்லி உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்கள் 500 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

    தொடக்கத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பின்னர் பொருட்களின் தரம் குறைந்ததால் அவற்றை வாங்குவதை தவிர்ப்பதாக பொதுமக்கள் காரணம் கூறுகின்றனர். மலிவு விலை மளிகை தொகுப்புகளை வாங்க மக்களிடையே ஆர்வம் குறைந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ரேஷன் கடைளில் தேங்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை கெட்டுப்போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.

    பல இடங்களில் பொருட்கள் விற்கப்படாத நிலையிலும் அவற்றிக்கான பணத்தை செலுத்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலிவு விலை பொருட்களில் பூண்டு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு எளிதில் கெட்டுப் போவதால் அவற்றை இருப்பு வைப்பதில் சிரமம் இருப்பதாகவும் விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.

    Also read: குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்ட குறைமாத குழந்தை - பெரும்பயனாக இருந்த அரசின் தாய்ப்பால் வங்கி

    மலிவு விலை மளிகை பொருட்கள் தேக்கம் குறித்து, நியூஸ்18 தமிழ்நாட்டுக்கு விளக்கமளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘அவற்றை விரைந்து விற்பனை செய்ய ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மலிவு விலையில் தரமான பொருட்களே ரேஷன் கடைகளில் விற்கப்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: