மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் வெளியேற்றம்; பசியால் ரோட்டில் மயங்கிய பரிதாபம்

நேற்று 12 மணிக்கு வெளியேற்றப்பட்டு செல்ல இடம் தெரியாமல் மதுரையில் சுற்றி வந்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் வெளியேற்றம்; பசியால் ரோட்டில் மயங்கிய பரிதாபம்
  • Share this:
மதுரையில் சிகிச்சையில் இருந்த காங்கேயத்தை சேர்ந்தவரை அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியதால் ஊருக்கு செல்ல முடியாமல் உணவின்றி ரோட்டில் மயங்கி விழுந்தார்.

மதுரையில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த காங்கேயத்தை சேர்ந்த மகேஷ் என்பவர், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக ஓட்டல் அடைக்கப்பட்ட நிலையில் அங்கு தங்கி வந்த மகேஷூம் தங்க இடமின்றி தவித்துள்ளார்.

இதனிடையே உடல் நிலை சரியில்லாமல் போக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறும் அவர், நேற்று 12 மணிக்கு வெளியேற்றப்பட்டு செல்ல இடம் தெரியாமல் மதுரையில் சுற்றி வந்துள்ளார்.


வடக்குமாசி வீதி பகுதியில் வந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பசி வேறு வாட்டியதால் ரோட்டில் மயங்கிவிழுந்த அவர் மூச்சு திணறால் துடித்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிகிச்சைக்காக மீண்டும் அரசுராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தென்மாவட்டத்தை சேர்ந்த பலர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் வெளியூர் செல்ல பஸ் வசதியில்லாதால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை கையாள வேண்டும் என்கிற கோரிக்கை ஏழுந்துள்ளது.

First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading