Read More : உலகக் குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ஜெர்லின் அனிகாவிற்கு அவரது பள்ளி தோழிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜெர்லின் அனிகா வாழ்த்து பெற்றார், ஜெர்லின் அனிகாவுக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அவரது தந்தை ஜெயரட்சகன் நன்றி கூறினார்.
இதுகுறித்து அவருடைய தந்தை ஜெயரட்சகன் கூறுகையில்," பாரா ஒலிம்பிக்கில் ஒரே போட்டியில் 3 தங்க பதக்கங்களை முதல் முறை ஜெர்லின்வென்றுள்ளார். பயிற்சியாளர் சரவணன் நேரம் காலம் பார்க்காமல் தன்னுடைய மகளுக்கு பயிற்சியளித்து தற்போது வெற்றி பெற செய்துள்ளார், இந்த வெற்றிக்கு முழு காரணம் அவர்தான், வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக உள்ளது, பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மாரியப்பனுக்கு எப்படி ஊக்கத்தொகை கொடுத்து அரசு உதவி செய்ததோ, அதே போல் ஜெர்லின் க்கும் ஊக்கத்தொகை கொடுத்து உதவினால், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்.
மேலும், வருகிற 21 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை வீராங்கனை ஜெர்லின் அனிகா சந்திக்க உள்ளார், பிரதமருடன் ஜெர்லின் அனிகா காலை உணவு அருந்துவதாகவும், ஜெர்லின் அனிகா பயன்படுத்திய ராக்கெட்டில் கையெழுத்திட்டு தரும்படி பிரதமர் கேட்டு உள்ளதாகவும்" தெரிவித்தார்.
தொடர்ந்து அவருடைய தாயார் லீமா கூறுகையில்," சிறுவயதில் பல போட்டிகளில் கலந்து கொண்டு தோல்விகளை தழுவினாலும் கூட, இந்த போட்டியில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோர்கள், பெண் பிள்ளைகளை வீட்டில் அடைத்து வைக்க வேண்டாம், பிள்ளைகளுக்கு குறைபாடு இருப்பதாக கூறி கவலைப்படவும் வேண்டாம், அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வாருங்கள், அப்படி கொண்டுவந்தால் உலகில் பல சிங்கப்பெண்கள் உருவாகுவார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 2018 ல் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் போட்டிகளில் கலந்து கொண்டு 2 வெள்ளிப் பதக்கமும் 1 வெண்கலமும், 2019 ல் சீன ஐடோல் உலக சாம்பயன்ஷிப் Badminton போட்டியில் 1 தங்க பதக்கமும், 2 வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். ஒவ்வொரு பெற்றோர்களும் தனது குழந்தையின் திறமையை கண்டறிந்து அதை வெளி கொண்டுவந்தால் அனைவரும் சாதிக்கலாம் என்பதற்கு ஜெர்லின் அனிகாவே உதாரணம்.