முதல் பட்டதாரி கனவோடு கல்லூரி சென்ற மாணவி; உடல் கருகி வீட்டில் முடங்கிய சோகம் !

ஆசிட் வீசிய இளைஞர் மனநோயாளி என வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண், பட்டதாரி கனவை இழந்து நான்கு ஆண்டுகள் நோயாளியாக சிகிச்சை பெற்று அலங்காரமாய் கல்லூரிக்கு சென்றவர், அலங்கோலமாய் வீடு திரும்பியுள்ளார்.

News18 Tamil Nadu | news18
Updated: July 11, 2019, 10:53 PM IST
முதல் பட்டதாரி கனவோடு கல்லூரி சென்ற மாணவி; உடல் கருகி வீட்டில் முடங்கிய சோகம் !
பாதிக்கப்பட்ட மீனா
News18 Tamil Nadu | news18
Updated: July 11, 2019, 10:53 PM IST
பின்தங்கிய குடும்பத்திலிருந்து முதல் பட்டதாரி கனவோடு கல்லூரிக்கு வந்த மாணவி மீது ஆசிட் வீசப்பட்டு முகம் சிதைந்து, தந்தையில்லாமல் ஆதரிக்க ஆளில்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் இளம் பெண்ணின் சோக கதைதான் இது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன பூலாம்பட்டியை சேர்ந்தவர் மீனா. தந்தை உதயசூரியன் டெய்லராக உள்ளார்..

பல தலைமுறையாக ஏழ்மை நிலையில் இருந்த குடும்பத்தில் முதல் பட்டதாரியை உருவாக்க அள்ளும் பகலுமாக உழைத்தார் உதயசூரியன்.


ப்ளஸ் 2 முடித்து மதுரை திருமங்கலம் காமராஜர் பல்கலை உறுப்பு கல்லூரியில் இளங்கலை ஆங்கில பட்டப்படிப்பில் சேர்ந்த ஓரிரு நாளில் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் உடல்நலக்குறைவில் காலமானார் உதயசூரியன்.முதல் பட்டதாரி கனவோடு வந்த பெண்ணிற்கு ஆறுதலாய் இருக்க வேண்டிய தந்தை மறைந்த சோகம் அடங்குவதற்குள் அடுத்த பேரதர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

Loading...

கல்லூரியில் சேர்ந்த 21-ம் நாள்,  2014 செப்டம்பர் 12-ம் தேதி அன்று மதியம் 1:30 மணியளவில் , வழக்கம் போல் தன் தோழிகளுடன் கல்லூரி முடித்து விட்டு பஸ் ஏறுவதற்காக திருமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார் மீனா.

அப்போது மீனா மீது எதிரே வந்த இளைஞர் ஒருவர் ஆசிட் வீசி முகம், கைகளை சிதைத்தார். கல்லூரி சேர்ந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், ஆசிட் வீச்சுக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்ந்தார் மீனா.ஆசிட் வீசிய இளைஞர் மனநோயாளி என வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண், பட்டதாரி கனவை இழந்து நான்கு ஆண்டுகள் நோயாளியாக சிகிச்சை பெற்று அலங்காரமாய் கல்லூரிக்கு சென்றவர், அலங்கோலமாய் வீடு திரும்பியுள்ளார்.ஆசிட் வீச்சு நடந்த போது ஆளாளுக்கு உதவுவதாக அரசு தரப்பும், தன்னார்வலர் தரப்பும் போட்டி போட்டு அளித்த வாக்குறுதிகள் இதுவரை வாக்குறுதியாகவே இருக்கும் நிலையில், தன் முதல் பட்டதாரி கனவுடன் தன் முகமும் சிதைந்ததால் வெளியே வர முடியாமல், கடந்த 8 மாதமாக வீட்டிலேயே முடங்கியுள்ளார் மீனா.கணவர் இறந்துவிட்டார்; மகளும் முடங்கிவிட்டார். எஞ்சியிருக்கும் மகனையும் வளர்க்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் வீட்டு வேலைகளுக்கு சென்று கொண்டிருக்கிறார் மீனாவின் தாய் முருகேஸ்வரி.

தந்தை இறந்ததால் தாய்க்கு கிடைக்கும் விதவை உதவித்தொகை 1000 ரூபாயை வைத்து 3 பேரை கொண்ட அந்த குடும்பம் பிழைப்பை நடத்திவருகிறது.

 

ஆயிரம் கனவுகளை சுமந்த மாணவி, இன்று எப்படி குடும்ப சுமையை சுமக்க போகிறோம் என்கிற வேதனையில் மாவட்ட ஆட்சியரின் கதவுகளை தொடர்ந்து தட்டிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இதுவரை கதவு திறக்கப்படவில்லை.

- செய்தியாளர் ஸ்டாலின், மதுரை
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...