மதுரை: மதுப்பிரியர்களை வரவழைக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய யுக்தியை கடைபிடிக்கும் டாஸ்மாக்..

மதுரையில் வீழ்ந்த போன மது விற்பனையை மீட்க கொரோனோ அச்சத்தை தீர்க்கும் விதமாக டாஸ்மாக் கடை முழுவதும் ‘லேமினேஷன்’ செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் வீழ்ந்த போன மது விற்பனையை மீட்க கொரோனோ அச்சத்தை தீர்க்கும் விதமாக டாஸ்மாக் கடை முழுவதும் ‘லேமினேஷன்’ செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
மதுரையில் வீழ்ந்து போன மது விற்பனையை மீட்கவும் கொரோனோ அச்சத்தை தீர்க்கும் விதமாகவும் டாஸ்மாக் கடை முழுவதும் ‘லேமினேஷன்’ செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தை போக்கும் நடவடிக்கையால்  மதுப்பிரியர்கள் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகம் மதுபானம் விற்கும் மண்டலம் என்கிற பெயர் பெற்ற மதுரை மண்டலத்தின் முக்கிய விற்பனை மதுரை மாவட்டத்தினுடையதாக இருந்தது. ஆனால் ஊரடங்கிற்கு பின்பாகவும், அடுத்தடுத்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாகவும் டாஸ்மாக் கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இதன் காரணமாக மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு மாவட்ட டாஸ்மாக் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 கோடிக்கு நடந்த விற்பனை 50 சதவீதம் குறைந்தது. இருப்பினும் கடைகளை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. விற்பனையையும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதேநேரத்தில் தங்களுக்கும், வரக்கூடிய மதுப்பிரியர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என எண்ணிய டாஸ்மாக் விற்பனையாளர்கள், ஒருங்கிணைந்த ஒரு முயற்சியை எடுத்தனர்.

அதன் படி டாஸ்மாக் கடையின் முகப்பு முழுவதையும் லேமினேஷன் செய்ய முடிவு செய்தனர். மதுப்பிரியர்கள் அட்டகாசத்திலிருந்து பாதுகாக்க போடப்பட்ட கம்பி வலை முகப்புக்கு முன்னாள் பாலீத்தினால் ஆன லேமினேஷன் செய்து முகப்பு முழுவதையும் அடைத்தனர்.

மது வாங்குபவருக்கும், அதற்கான பணம் வாங்குவதற்கு மட்டும் சிறிய துளை வைக்கப்பட்டு, அந்த வழியை மட்டும் பயன்படுத்த முடிவு செய்தனர். அதன் படி 900 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை ஒவ்வொரு கடைக்கும் அந்தந்த முகப்பிற்கு ஏற்றவாறு லேமினேஷன் செய்யப்பட்டுள்ளது.

அதற்கான செலவை டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேட்காமல், விற்பனையாளர்களே பகிர்ந்து அந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். துளை வழியே நடக்கும் பரிவர்த்தனையிலும் பாதுகாப்பு தேவை என்பதற்காக கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுகிறது.

என்னதான் ஆல்கஹால் விற்கும் இடமென்றாலும் அதிகம் பேர் கூடும் இடம் என்பதால் இந்த பாதுகாப்பு அவசியம் என்று கூறும் விற்பனையாளர்கள், இது விற்பனையாளர், வாடிக்கையாளர் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதை தாங்களே ஏற்பாடு செய்து கொண்டதாக கூறுகின்றனர்.

மதுரையில் 80 சதவீதம் கடைகளில் இந்த லேமினேஷன் பாதுகாப்பு செய்யப்பட்டதால் மீண்டும் மதுப்பிரியர்கள் வருகை கணிசமாக வரத்துவங்கியுள்ளதாகவும், இது தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க...சென்னையில் இந்த 9 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை.. முழு விவரம்..

மதுப்பிரியர்கள் மட்டுமல்ல மது விற்பவர்களும் சிந்திப்போம் என்கிற அளவில்தான் டாஸ்மாக் விற்பனையாளர்களின் இந்த முயற்சியை பார்க்க வேண்டியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published: