மனைவி இறந்ததால் மகனைக் கொன்று தற்கொலை செய்த தந்தை!

தனது சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்குமாறு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 3, 2019, 7:51 AM IST
மனைவி இறந்ததால் மகனைக் கொன்று தற்கொலை செய்த தந்தை!
மனைவி இறந்ததால் தற்கொலை செய்து கொண்ட கணவன்
Web Desk | news18
Updated: August 3, 2019, 7:51 AM IST
மதுரையில் மனைவி இறந்த சோகத்தில் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் வசித்து வந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி பாரதிக்கு கடந்த 6 ஆண்டுகளாக வாதநோய் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கண்பார்வை நோய் ஏற்பட்டதால் கணவர் கார்த்திகேயன் மனைவியை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கவனித்து வந்துள்ளார். இருவருக்கும் 14 வயதுடைய சபா என்ற மாற்றுத்திறனாளி மகனும் இருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக, பாரதி உயிரிழந்ததால் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் தனது மாற்றுத் திறனாளி மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.


பின்பு தனது சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்குமாறு கடிதம் எழுதி வைத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், வீட்டிலிருந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க...  செருப்பால் அடித்ததால் ஆத்திரம்.. பெண்ணை கொன்ற அத்தை மகன்

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...