• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மனைவி கள்ளத்தொடர்பு: 2 மகன்களை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை முயற்சி

மனைவி கள்ளத்தொடர்பு: 2 மகன்களை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை முயற்சி

Youtube Video

கொலை மற்றும் தற்கொலைக்கு முன்பாக, மனைவியின் கள்ளக்காதலரான கனகராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார் குமார்.

  • Share this:
    மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்ப்பவர் 29 வயதான உஷாராணி. இவரது கணவர் குமார் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த தம்பதிக்கு 8 வயதில் கோப்பெருஞ்சோழன், 6 வயதில் சித்தார்த்தன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.

    பாலமேடு பேரூராட்சியில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றும் 45 வயது கனகராஜுக்கும் உஷாராணிக்கும் நீண்ட நாளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

    சமீபத்தில் இதுபற்றி குமாருக்குத் தெரியவந்ததும் அவர் பலமுறை இருவரையும் எச்சரித்து கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி கள்ளத் தொடர்பு தொடர்ந்தது.

    ஆத்திரமடைந்த குமார், கனகராஜை கொலை செய்யத் தீர்மானித்துள்ளார். ஆத்திரத்துடன் இருந்த குமார், தனது திருமண ஆல்பம் மற்றும் குடும்ப போட்டோக்களில் மனைவியின் முகத்தை கத்தியால் கீறி அழித்துள்ளார்.

    பின்னர் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்திற்கு அரிவாளுடன் சென்ற குமார், அங்கு நின்றிருந்த கனகராஜின் கழுத்தை குறிவைத்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

    கனகராஜ் தனது கையால் தடுத்ததில் அரிவாள் வெட்டு அவரது கையில் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கனகராஜ் கீழே விழ, குமார் தப்பியோடி தலைமறைவானார்.

    அங்கிருந்தவர்கள் உடனடியாக கனகராஜை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து போலீசாரும் உறவினர்களும் குமாரைத் தேடிய நிலையில் அவரும் அவரது மகன்கள் இருவரும் மாயமாகியிருந்தனர்.

    இந்த நிலையி்ல் பிற்பகல் 1 மணியளவில், பாலமேட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாடக் கருப்பு கோவிலில், குமார், தனது இரு மகன்களுடன் குருணை மருந்து அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

    அப்பகுதி மக்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்போதே சிறுவன் சித்தார்த் உயிரிழந்து விட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூத்த மகன் கோப்பெருஞ்சோழனும் உயிரிழந்தார். குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் படிக்க: "எனக்கு கொரோனா இல்லை" : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..

    இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உஷாராணியைத் தேடி வருகின்றனர். மனைவியின் தகாத உறவால் மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பாலமேட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: