ஒடிசாவில் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் அடித்துக் கொலை!

Web Desk | news18
Updated: September 16, 2019, 11:27 PM IST
ஒடிசாவில் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் அடித்துக் கொலை!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: September 16, 2019, 11:27 PM IST
மதுரையை சேர்ந்த பொறியாளர் ஒடிசாவில் இரும்பு உற்பத்தி தொழிற்சாலையில் சக பணியாளரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இரும்பு உற்பத்தி ஆலையில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை பணியில் இருந்த இவர், ஒப்பந்த பணியாளர் அனில் லோகர் என்பவருக்கு பணி நேரத்தை ஒதுக்கியுள்ளார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அனில் லோகர் இரும்பு கம்பியால் கணேஷ்குமாரை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேஷ்குமாரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. அவரது சடலத்தை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக உறவினர்கள் ஒடிசா விரைந்துள்ளனர்.


கணேஷ்குமாரின் தந்தை குமார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். வறுமைக்கு மத்தியில் கல்வி கடன் பெற்று பொறியியல் படிப்பை முடித்த கணேஷ்குமார் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ரூர்கேலா இரும்பு தொழிற்சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் பணியில் இணைந்துள்ளார். கணேஷ்குமாருக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கணேஷ்குமாரை அடித்துக் கொன்ற ஒப்பந்த பணியாளர் அனில் லோகரை ஒடிசா போலீசார் கைதுசெய்தனர்.

Also see:

First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...