தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை வந்தார் பிரதமர்

அமைதியின் நிலமான கேரளத்தில் அரசியல் வன்முறையை காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை வந்தார் பிரதமர்
மோடி
  • News18
  • Last Updated: April 13, 2019, 8:04 AM IST
  • Share this:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். மதுரையில் தங்கியுள்ள அவர், தேனி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று கலந்துகொள்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக கேரளாவிலிருந்து நேற்றிரவு 10 மணியளவில், விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

அவரை துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மோடி, பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தேனியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.


இதற்காக மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம், தேனிக்கு செல்கிறார். தேனி தொகுதி அதிமுக வேட்பாளரும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் தொகுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்ல உள்ளார்.

முன்னதாக, கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், அமைதியின் நிலமான கேரளத்தில் அரசியல் வன்முறையை காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.மேலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிகளால் கேரளாவின் கலாசாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா என்பது அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நிலமாக உள்ளது. பொறுப்பற்ற கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸால், அரசியல் வன்முறை கலாசாரம் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்காக சேவையாற்றியதற்காக தேசப்பற்றுமிக்க பல்வேறு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பெயரளவில் மட்டுமே வேறுபட்டிருப்பதாகவும், மாநிலத்தை கொள்ளையடிப்பதில் இரு கூட்டணியும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

Also see... நீட் தேர்வு விவகாரம்! மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புது விளக்கம்

Also see... பிரசார மேடை: பிரசாரத்திற்கு பின் குப்பையை அகற்றிய பாமக தொண்டர்கள்


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading