பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ சரவணனுக்கு மனப்பக்குவம் இல்லை - தி.மு.க எம்.எல்.ஏ வேட்பாளர் விமர்சனம்

Youtube Video

மதுரை கிழக்கு தொகுதியில் எதிரணி வேட்பாளர்கள் எனக்கு பெரிய சவால் இல்லை. மக்கள் பலத்துடன் இருப்பதால் மதுரை கிழக்கு தொகுதியில் எனக்கு வெற்றி உறுதி என மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திமுகவிலிருந்து விலகிய சரவணன் மனப்பக்குவம் இல்லாதவர் என்றும் எதையோ எதிர்பார்த்து பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார் என்றும் மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு நேர்காணலில் பதில் தெரிவித்த அவர், திமுக தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை கிழக்கு தொகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த ஆட்சியின் அவல நிலை. எந்த தேவையையும் செய்யாத ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்புத் திட்டத்தை விரிவுப்படுத்துவோம்.

  இந்த தேர்தலை நான் சவாலாக எண்ணவில்லை. நான் மக்களோடு மக்களாக நெருங்கிய தொடர்பில் உள்ளேன். நான் மக்கள் பலத்தோடு உள்ளேன். மதுரை கிழக்கு தொகுதியில் எதிரணி வேட்பாளர்கள் எனக்கு பெரிய சவால் இல்லை. மக்கள் பலத்துடன் இருப்பதால் மதுரை கிழக்கு தொகுதியில் எனக்கு வெற்றி உறுதி.

  பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ சரவணன் குறித்து பேசிய அவர், சரவணனுக்கு மனப்பக்குவம் இல்லை, அவர் இல்லாததால் திமுகவிற்கு இழப்பு கிடையாது என தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: