மதுரையில் ராகிங் கொடுமையால் விஷம் அருந்திய மாணவர்கள் உயிரிழப்பு!

ராகிங் கொடுமையால் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

news18
Updated: March 16, 2019, 1:28 PM IST
மதுரையில் ராகிங் கொடுமையால் விஷம் அருந்திய மாணவர்கள் உயிரிழப்பு!
உயிரிழந்த மாணவர்கள்
news18
Updated: March 16, 2019, 1:28 PM IST
மதுரையில் ராகிங் பிரச்னையால் விஷம் குடித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில், முத்துப்பாண்டி மற்றும் பரத் முதலாமாண்டு பி.ஏ.பொருளாதாரம் படித்து வந்துள்ளனர்.

இருவரும் தொடர்ந்து சில நாட்களாக ராகிங் கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த இரண்டாம் தேதி அவரவர்களின் வீட்டில் விஷம் குடித்துள்ளனர்.

ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் பரத் உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று முத்துப்பாண்டியும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சிகிச்சையில் இருக்கும்போது முத்துப்பாண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு, ராகிங் செய்ததாக ஜெயசக்தி என்ற மாணவரை தல்லாக்குளம் போலிசார் தேடி வருகின்றனர்.

Also see...
Loading...
First published: March 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...