மாப்பிள்ளை தாலி கட்டும் போது ‘நிறுத்துங்க..’ என்று கர்ப்பிணி குரல்... விட்டுக்கொடுத்த மணப்பெண்...!

news18
Updated: September 12, 2019, 3:56 PM IST
மாப்பிள்ளை தாலி கட்டும் போது ‘நிறுத்துங்க..’ என்று கர்ப்பிணி குரல்... விட்டுக்கொடுத்த மணப்பெண்...!
மாதிரிப்படம்
news18
Updated: September 12, 2019, 3:56 PM IST
மாப்பிள்ளை தாலி கட்டும் போது, ‘நிறுத்துங்க...’ என அவலப்பெண் குரல் கொடுத்து திருமணத்தை நிறுத்தும் எத்தனையோ சினிமா காட்சிகளை பார்த்திருப்போம். அப்படியோரு காட்சி மதுரையில் இன்று அரங்கேறியது.

மதுரை மாவட்டம் வலையபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி(29). இவருக்கும் கட்டாரெட்டிபட்டியை சேர்ந்த பவித்ராதேவி என்பவருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள அரங்கு ஒன்றில் காலை 11 மணிக்கு திருமணம் நடைபெறவிருந்தது.

உற்றார் உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்த நிலையில் தாலி கட்டும் நேரத்தில், கையில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், ‘நிறுத்துங்க...’ என்ற குரலுடன் அரங்கிற்குள் நுழைந்தார். அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க, வந்தவர் விக்கிரமங்கலத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஈஸ்வரி.


திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனிமையில் வசித்து வந்த ஈஸ்வரிக்கும்(37), முனியாண்டிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தன்னை விட வயது மூத்த ஈஸ்வரியுடன் முனியாண்டி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், வீட்டாருக்கு இது தெரியவர முனியாண்டிக்கு அவரது வீட்டார் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Also See... மூன்றாவது திருமணம் செய்ய முயற்சித்த கணவனுக்கு தர்ம அடி!

இதற்கிடையில் தான் இரண்டு மாதம் கர்ப்பமான விசயம் ஈஸ்வரிக்கு தெரியவந்துள்ளது. அதை முனியாண்டியிடம் தெரிவிக்க முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் தற்செயலாக முனியாண்டியின் நண்பர் ஒருவருக்கு போன் செய்து கேட்ட போது, முனியாண்டிக்கு இன்று திருமணம் என்ற தகவல் தெரிந்துள்ளது.

Loading...

உடனே குழந்தையோடு அங்கு வந்த ஈஸ்வரி திருமணத்தை நிறுத்தி தனக்கு நியாயம் வேண்டும் எனக்கூறி திருமண அரங்கில் தர்ணா செய்துள்ளார். இந்த விவகாரத்தை சற்றும் எதிர்பாராத பெண் வீட்டார் அதிர்ந்து போயினர்.

ஈஸ்வரியின் குற்றச்சாட்டை முனியாண்டி மறுக்காத நிலையில் அதை கவனித்த மணப்பெண் பவித்ராதேவி, முனியாண்டியை திருமணம் செய்ய மறுத்து, திருமண நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு அவரது பெற்றோரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து உடனடியாக திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

Also See.. பள்ளியில் உல்லாசம்; ஆசிரியருக்கு தர்ம அடி

தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருதரப்பும் காவல் நிலையம் சென்றனர். தங்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக புகார் தெரிவித்த பவித்ரா தேவியின் தந்தை, பின்னர் இருவரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு திருமணத்திற்கு தான் செலவழித்த தொகையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஈஸ்வரி உடன் வாழ செல்வதாக முனியாண்டி ஒப்புக்கொண்டதை தொடர்ந்து மூன்று தரப்பும் சமரசமாக பிரச்னையை தீர்த்து கொள்ளுமாறு போலீசார் வலியுறுத்தி அனுப்பி வைத்தனர். விருந்து, விழாக்கோலம் என தடபுடலாக இருந்த திருமண அரங்கம், இறுதி கட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பால் வெறிச்சோடி போனது.

திருமண வேலைக்கு வந்தவர்கள் மேடையில் உறங்கி பணியை முடித்துக் கொண்டனர். சினிமா பாணியில் நடக்கும் முன்பே முடிந்து போன திருமணத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...