மதுரையில் 'அம்மா கிச்சன்' செயல்பாடு; மருத்துவ குழுவினர் ஆய்வு

மதுரை அம்மா கிச்சனில் தயாராகும் உணவுகளை மருத்துவ குழுவினர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

மதுரையில் 'அம்மா கிச்சன்' செயல்பாடு; மருத்துவ குழுவினர் ஆய்வு
மதுரை 'அம்மா கிச்சன்'
  • Share this:
மதுரை மாவட்டத்திலுள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ஒட்டுமொத்தமாக அம்மா கிச்சன் மூலம் ஐந்து வேளை உணவு வழங்கப்படுகிறது. அதிமுகவின் ஜெயலலிதா பேரவை, அம்மா சரிடபிள் டிரஸ்ட் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அம்மா கிச்சன் உணவுகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.

அங்கு உணவு தயாரிக்கப்படும் முறை குறித்து மதுரை மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மருது பாண்டியன், குரு மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பாலமுருகன் அடங்கிய மருத்துவ குழு அம்மா கிச்சனில் தயாராகும் உணவுகள் குறித்தும், அதன் சுகாதாரம் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார், உணவு தயாரிப்பில் மேற்கொள்ளப்படும் நடைமுறை குறித்து மருத்துவ குழுவினரிடம் விளக்கினார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரும் இந்த ஆய்வில் பங்கேற்று உணவின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு நடத்தினார்.


மேலும் படிக்க...

சேலத்தில் காதலன் வீட்டு முன்பு உயிரைமாய்த்துக்கொண்ட காதலி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மருது பாண்டியன், "கொரோனா நோயாளிகளுக்கு பயனுள்ள வகையில் உணவு இங்கு தயாராவதாக தெரிவித்தார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading