மதுரையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை!

மாதிரி படம்

அவருக்கு சர்க்கரை வியாதி இருந்து கடந்த 6 மாதமாக சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்துள்ளார். அவருக்கு வேறெந்த இணை நோய்களும் இல்லை என தெரிகிறது.

  • Share this:
மதுரையில் நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர் இன்று உயிரிழந்துள்ளார். உடற்கூராய்வு முடிந்த பின்னர் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை புது விளாங்குடி பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் ஆண்ட்ரூ சைமன் மென்பொருள் பொறியாளராக வீட்டிலிருந்து பணியாற்றி வந்துள்ளார்.

இவரும் இவரது மனைவியும் நேற்று மதியம் இரண்டு மணியளவில் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஊசி செலுத்தி விட்டு மையத்தில் காத்திருந்த போது அவருக்கு எந்தவித பக்கவிளைவுகளும் வெளிப்படவில்லை.

பின்னர் இன்று காலை 8:30 மணி அளவில் கழிப்பறைக்கு சென்ற போது சுவாசக் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காலை 10:45 மணிக்கு அழைத்து வந்த போது அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also read: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை அலார்ட் - வானிலை ஆய்வு மையம்

அவருக்கு சர்க்கரை வியாதி இருந்து கடந்த 6 மாதமாக சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்துள்ளார். அவருக்கு வேறெந்த இணை நோய்களும் இல்லை. மது, புகை பழக்கங்களும் இல்லாத நிலையில் உடற் கூராய்வு முடிந்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: