முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்..! - நிற்கதியாய் நிற்கும் பரிதாபம்

தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்..! - நிற்கதியாய் நிற்கும் பரிதாபம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Crime News | தனது தோழிக்காக உடலை இழந்து, பணத்தையும் இழந்து, பெற்றோரின் உறவையும் இழந்து தற்போது செய்வதறியாது நிர்கதியாக நிற்பவரின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :

மதுரையில் தனது தோழியை திருமணம் செய்து கொள்வதற்காக ஆணாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் தற்போது யாருடைய ஆதரவும் இன்று நிர்கதியாய் நிற்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள்  நீண்டநாட்களாக தோழிகளாக இருந்து வந்துள்ளனர். கடந்த, 6 மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி, 2021 டிசம்பர் மாதம் இளம்பெண்ணில்  ஒருவர் தன்னை உடலளவில் ஆணாக மாற்றிக் கொள்வதென முடிவெடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் தன் உடல் உறுப்புகளை மாற்றிக் கொண்டுள்ளார். ஆண் தன்மையை அடைவதற்கான மரபணு (ஹார்மோன்) ஊசியையும் செலுத்தி வந்துள்ளார்.

பின்னர் தனது பெயரையும் மாற்றம் செய்து கொண்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.தொடர்ந்து, இருவரும் திருப்பரங்குன்றம் பகுதியிலேயே சில மாதங்கள் வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் தெரிந்து ஆத்திரப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோர், அவரை  பிரித்து அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.மேலும், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஆணாக மாறிய தோழியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனக்கூறி எழுதிக் கொடுத்து விட்டு தனது பெற்றோருடன் சென்று விட்டார்.

இதையும் படியுங்கள் :  சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஒட்டுநர்.. விளக்குமாறு ட்ரீட்மெண்ட் கொடுத்த பெண் (வீடியோ)

 

தனது தோழிக்காக உடலை இழந்து, பணத்தையும் இழந்து, பெற்றோரின் உறவையும் இழந்து தற்போது செய்வதறியாது நிர்கதியாக நிற்கும் பெண்ணின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் : ஆர்.எஸ். ஹரிகிருஷ்ணன்

    First published:

    Tags: Crime News, Madurai