ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடிபோதையில் சில்மிஷம் செய்த ஆசாமி.. வெளுத்து வாங்கிய இளம்பெண் - பொதுமக்கள் பாராட்டு

குடிபோதையில் சில்மிஷம் செய்த ஆசாமி.. வெளுத்து வாங்கிய இளம்பெண் - பொதுமக்கள் பாராட்டு

 தவறாக நடந்த நபரை தாக்கிய பெண்

தவறாக நடந்த நபரை தாக்கிய பெண்

Madurai District : டாஸ்மாக்கில் குடித்து விட்டு தவறாக நடந்த நபருக்கு சரமாரியாக தர்ம அடி கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை பேருந்து நிலையத்தில் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை இளம்பெண் அடித்து துவைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் நேற்று மாலையில் பணி முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் குடிபோதையில் இருந்த நபர் தவறாக நடந்து கொண்டு தப்பி ஓடியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை பெரியார் பேருந்து நிலையத்தின் நடைமேடைகளில் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

ALSO READ |  இலங்கையில் 26 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா.. மகிந்த ராஜபக்சே மட்டும் பிரதமர் பதவியில் தொடர முடிவு

 தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் களிமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திடீர் நகர் போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தவறு செய்த நபரை துணிச்சலுடன் தட்டிக் கேட்ட பெண்ணின் செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

 

செய்தியாளர் : ஹரிகிருஷ்ணன் ( மதுரை)

First published:

Tags: Madurai, Tasmac