Home /News /tamil-nadu /

உயிரை கொடுத்தாவது தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் - மதுரை ஆதினம்

உயிரை கொடுத்தாவது தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் - மதுரை ஆதினம்

தருமபுரம் ஆதினம்

தருமபுரம் ஆதினம்

Madurai Aadheenam | எங்கள் உயிரை கொடுத்தாவது தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதினத்தில் நடக்க உள்ள பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார். இந்நிலையில் 293வது ஆதினம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 500 ஆண்டுகளாக நடைபெறும் பழக்கம் இதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும். இதன் உள் நோக்கம் என்ன? தருமபுர ஆதினமும், துருவாவடுதுரை ஆதினமும் இது போன்று பட்டின பிரவேசம் செய்கிறது. ஆன்மீகத்தில் அரசியல் வாதிகள் தலையீடு உள்ளது. தமிழக முதல்வரே முன்னின்று இந்த நிகழ்வை நடத்தி வைக்க வேண்டும். தடை செய்யப்பட்டதை நினைத்து நேற்று இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.

பட்டின பிரவேசம் தடை தொடர்ந்தால், சொக்கநாதரிடம் முறையிடுவேன். நானே சென்று பட்டின பிரவேசம் நடத்துவேன். ஏனென்றால் நான் அந்த மடத்தில் வளர்ந்தவன். ஆங்கிலேய ஆட்சிகாலத்திலே, பட்டின பிரவேசம் நடந்தது. கலைஞர் காலத்தில் நடந்தது. தடையை நீக்கா விட்டேல் நானே தடையை மீறி பட்டின பிரவேசம் நடத்துவேன். எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம்.

Also Read : மருத்துவக் கல்லூரி உறுதிமொழியில் சமஸ்கிருத திணிப்பா? தமிழக அரசின் உடனடி நடவடிக்கை பாராட்டுக்குரியது - கி.வீரமணி

சைவ மடங்கள் தமிழ் வளர்த்த மடங்கள் அச்சுறுத்தல்கள் பற்றி கவலை இல்லை. ஆளுநர் இந்த மடத்திற்கு ஒரு நிகழ்வுக்கு வந்து சென்றார் என்பதற்காக தடை செய்வதா? தமிழக அரசின் பாதுகாப்போடு இந்த பட்டின பிரவேசம் நடத்த வேண்டும். பல நூறு ஆண்டுகளாக நடைபெறுகிறது . இதை தடுத்த பாவத்திற்கு ஆளாக கூடாது. இது தான் எங்கள் இறுதி கோரிக்கை என்றார் மதுரை ஆதினம்.

மேலும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் , எங்கள் குரு நாதர் அவரை, அவரது சிஷ்யர்கள் பல்லக்கில் தூக்கி செல்வது. குரு நாதருக்கு சிஷ்யர்கள் செலுத்தும் காணிக்கை. இதில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் என பார்ப்பது ஏற்புடையது அல்ல. எனவே, தமிழக முதல்வர் உள்ளார். அந்த பதவிக்காக அனைவரும் மதிப்பும், மரியாதையும் வழங்கி உள்ளனர். அது போலதான் குரு நாதருக்கு சிஷ்யர்கள் பல்லக்கு தூக்கும் நிகழ்வு இதை தடை செய்ய கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
Published by:Vijay R
First published:

Tags: Madurai, Madurai Adhinam

அடுத்த செய்தி