நீதித்துறையே எங்களை புறக்கணிக்கலாமா? அரசுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட பார்வைக் குறைபாடுடையவர்கள் வேதனை

பார்வைக் குறைபாடுடையவர்கள் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் பார்வைத்திறன் குறைபாடுள்ள நபர்களை தேர்வு எழுத அனுமதிக்காத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு கடந்த 2020 மார்ச் மாதம் விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பார்வைத்திறன் குறைபாடு உள்ள நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் பங்கேற்க வந்த பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு, எழுதுபவர் (Scribe) இல்லாத காரணத்தால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரையில் உள்ள வேலம்மாள் அறிவியல் கல்லூரியில் சுமார் 30 பார்வைத்திறன் குறைபாடு உள்ள நபர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். சென்னை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தேர்வர்கள் இதனால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

அவர்கள் கூறுகையில்,"இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது மாற்றுத்திறனாளிகள் என்ற பிரிவில் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் என்று மிக தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டு தேர்வு நுழைவு சீட்டும் கிடைக்கப்பெற்றது. இருந்தும், எங்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் தேர்வு எழுத வந்தால் அவர்களுக்கான எழுத்தர்களை, தேர்வு மையங்களே ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவும் செய்யாமல், நாங்கள் உடன் அழைத்து வந்த எழுத்தர்களையும் அனுமதிக்கவில்லை.

எங்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை என்றால், எங்களுடைய விண்ணப்பங்களை நிராகரித்து இருக்கலாம். ஆனால், விண்ணப்பங்களையும் ஏற்று, நுழைவு சீட்டும் அளித்து இப்போது தேர்வு எழுத விடாமல் திருப்பி அனுப்புவது சரியல்ல. அதிலும், நீதித்துறை நடத்தும் தேர்விலேயே இப்படி நடக்கலாமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வறுமையான குடும்ப சூழலில் பல்லாண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துவிட்டு, பல மாவட்டங்கள் கடந்து செலவு செய்து தேர்வு எழுத வந்த எங்களை இப்படியா அலைக்கழிப்பது?" என கண்ணீர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Published by:Karthick S
First published: