ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரையில் மருத்துவத் தேவைக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டியவருக்கு உதவிய விஜய் ரசிகர்கள்

மதுரையில் மருத்துவத் தேவைக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டியவருக்கு உதவிய விஜய் ரசிகர்கள்

மதுரை ஆட்டோ ஓட்டுநர்

மதுரை ஆட்டோ ஓட்டுநர்

மருத்துவமனைக்கு இலவசம் என்று மக்கள் சேவையாற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கு மதுரை விஜய் ரசிகர்கள் எரிபொருள் நிரப்ப பண உதவி செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரையில் மருத்துவ அவசரத்திற்கு செல்லும் நோயாளிகள் மற்றும் எளியோர்களுக்கு பணம் வாங்காமல் இலவசமாக ஆட்டோ ஓட்டி சேவை செய்து கொண்டிருக்கிறார் மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லெட்சுமணன்.

ஊரடங்கு காலம் என்பதால் அடிப்படையிலேயே பொருளாதார நெருக்கடிகளை ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும், மூன்று குழந்தைகளையும், கூலி வேலைக்கு செல்லும் மனைவியையும் கொண்ட லெட்சுமணன் பெரும் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறார்.

அந்த நெருக்கடிகளை மீறியும் தன்னுடைய ஆட்டோவில் "மருத்துவமனை அவசரத்திற்கு இலவசம்" என்ற வாசகங்களை எழுதிக்கொண்டு மருத்துவமனை வாயில்களில் உதவிக்கரம் நீட்டி காத்திருக்கிறார். யார் வந்து ஏறினாலும் பத்திரமாக வீட்டிற்கும், வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும் கொண்டு சேர்க்கிறார்.

இந்தநிலையில் இவர் குறித்த செய்தி கடந்த மே 31 ஆம் தேதியன்று நமது நியூஸ் 18 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனை பார்த்த மதுரை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் ஆட்டோ ட்ரைவர் லட்சுமணனின் சேவைக்கு உதவிடும் வகையில் அவரது ஆட்டோவிற்கு தேவையான எரிபொருள் நிரப்ப முயற்சி எடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பாதிப்பு முடியும் வரை ஆட்டோ ட்ரைவர் லட்சுமணனின் சேவை தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும், அதுவரையிலான எரிபொருள் செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Karthick S
First published:

Tags: Madurai