ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நிவாரணம் வழங்கிய விஜய் ரசிகர்கள்; நடனமாடி நன்றி தெரிவித்த கலைஞர்கள்

நிவாரணம் வழங்கிய விஜய் ரசிகர்கள்; நடனமாடி நன்றி தெரிவித்த கலைஞர்கள்

விஜய் ரசிகர்கள் நிவாரணம்

விஜய் ரசிகர்கள் நிவாரணம்

நடனக் கலைஞர்களின்  100 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை மதுரை மாவட்டம் வடக்கு விஜய் ரசிகர் மன்ற தலைவர் கல்லாணை வழங்கினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரையில் நாடகம் நடனம் மற்றும் இசை கலைஞர்களுக்கு 100 குடும்பத்தாருக்கு மதுரை விஜய் ரசிகர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

மதுரை ராஜாக்கூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் நாடக மற்றும் நடனக் கலைஞர்களின்  100 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை மதுரை மாவட்டம் வடக்கு விஜய் ரசிகர் மன்ற தலைவர் கல்லாணை வழங்கினார்.

கொரோனா காலகட்டத்தில் பல மாதங்களாக நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறாமல் இருந்து வரும் சூழலில் கடும் பொருளாதார நெருக்கடியில் அவர்கள் தவித்து வந்த சூழலில்  அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவிகள் செய்ய வேண்டி கோரிக்கை வைத்திருந்தனர்.

Also Read : ஆக்ஸிஜன் கிடைக்காமல் தாய் இறந்ததை பார்த்து பரிதவிப்பு... ஆக்ஸிஜன் செறிவூட்டியை இலவசமாக வழங்கிய தமிழர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் விஜய் ரசிகர்கள் 70 குடும்பத்தினருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். பொருட்களைப் பெற்றுக்கொண்ட நாடகம் மற்றும் நடன கலைஞர்கள் இசை வாத்தியம் மூலமாகவும் நடனங்கள் மூலமாகவும் விஜயின் பாடலை இசைத்து, ஆடி தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

Published by:Vijay R
First published:

Tags: Actor Vijay, CoronaVirus