Home /News /tamil-nadu /

பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் - போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்...

பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் - போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்...

பிரசாந்த் கிஷோர் உடன் விஜய்

பிரசாந்த் கிஷோர் உடன் விஜய்

Actor Vijay Fans | நடிகர் விஜயின் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வருவது போன்ற போஸ்டர்களை அச்சடித்து பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் போஸ்டர் அடித்து அரசியல் பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்.

அவ்வப்போது நடிகர் விஜயின் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வருவது போன்ற போஸ்டர்களை அச்சடித்து பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் எம்ஜிஆர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களுடன் நடிகர் விஜயை ஒப்பீட்டு நாளைய முதல்வர் விஜய் என்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு போஸ்டர்களை ஓட்டுவார்கள்.

இது சமூக வலைத்தளத்தில் அதிகம் விமர்சிக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் வெளியான விஜய் குறித்தான செய்தியில் இதுவரை முழுமையான விவரங்கள் வெளிவராத நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் புகைப்படத்துடன் நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்திற்கு வருவது போன்ற போஸ்டர்களை மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் நடிகர் விஜய் ரகசியமாக பிரசாந்த் கிஷோரை சந்தித்ததை போலவும் அரசியலில் நடிகர் விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்குவார் என்பது போலவும் தகவல்கள் கசியத் தொடங்கின.

ஆனால் இது தொடர்பாக நடிகர் விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அதேபோல் மறுப்பு செய்தியும் தற்போது வரை வெளியாகவில்லை.

நடிகர் விஜயின் ரசிகர்கள் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருவதால் நடிகர் விஜய் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற பரபரப்பு நீடித்து வருகிறது.

Also read... லஞ்ச புகாரில் சிக்கிய அரசு சிறப்பு வழக்கறிஞரின் நீக்கம் செல்லும் - உயர் நீதிமன்றம்

இந்த நிலையில் இதுபோன்ற செய்தி மேலும் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அந்த அடிப்படையில் மதுரையில் எப்போதும் வித்தியாசமாக போஸ்டர் ஒட்டும் விஜய் ரசிகர்கள் இந்தமுறை பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜய் புகைப்படமும் உள்ள போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Prashant Kishor, Vijay fans

அடுத்த செய்தி