அணில் குட்டிகளுக்காக பைக்கை விட்டுக்கொடுத்த கால்நடை மருத்துவர்: மதுரையில் ஒரு நெகிழ்ச்சி நிகழ்வு!

அணில் குட்டிகளுக்காக பைக்கை விட்டுக்கொடுத்த கால்நடை மருத்துவர்: மதுரையில் ஒரு நெகிழ்ச்சி நிகழ்வு!

தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைக்குள் அடிக்கடி ஒரு அணில் வந்து சென்றுள்ளது.

  • Share this:
மதுரையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பிரசவமான அணில் குட்டிகளுக்காக மாற்று வாகனத்தை உபயோகித்து வந்த கால்நடை மருத்துவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை ஆனையூர் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர் மெரில்ராஜ், அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைக்குள் அடிக்கடி ஒரு அணில் வந்து சென்றுள்ளது.

Also read: மின் கட்டணத்துடன் கூடுதலாக டெபாசிட் கட்டணம் செலுத்த தேவையில்லை - மின்சாரத்துறை அறிவிப்பு

இதனை கவனித்த மெரில்ராஜ், அதில் அணில் ஒன்று கூடு கட்டி அதில் 3 குட்டிகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், கடந்த ஒரு மாத காலமாக அந்த வாகனத்தை உபயோகப்படுத்தாமல் மாற்று வாகனத்தை பயன்படுத்தி தனது அன்றாட பணிகளை செய்து வருகிறார்.

இதுகுறித்து மெரில் ராஜ் கூறுகையில், "மனிதர்களிடம் மனிதாபிமானம் காட்டுவதுபோல் விலங்குகள், பறவைகளிடமும் மனிதாபிமானம் காட்ட வேண்டும்.

Also read: "94"... - 96 பட பாணியில் மதுரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

இந்த அணில் குட்டிகளை மோட்டார் சைக்கிளில் இருந்து வெளியே விட்டும், அவைகள் அந்த வாகனத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்து உள்ளது. அதனால் அதனை அப்படியே விட்டுவிட்டு அந்த அணில்களுக்கு உணவு கொடுத்து வளர்க்க தொடங்கிவிட்டோம்" என்றார்.
Published by:Esakki Raja
First published: