மதுரை: கொரோனாவால் டெல்லி, ஹைதராபாத் விமான சேவைகள் ரத்து...

மதுரை: கொரோனாவால் டெல்லி, ஹைதராபாத் விமான சேவைகள் ரத்து...

மதுரை விமான நிலையம்

கொரோனா தொற்று காரணமாக விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மதுரை விமான நிலையத்தில் சென்னை, ஹைதராபாத் விமான சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • Share this:
    மதுரை விமான நிலையத்தில் கடந்த வருடம் ஜீலை மாதத்திற்கு பின் கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின் விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து மதுரையிலிருந்து டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 20 விமான சேவைகள் இயக்கப்பட்டன.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதாலும் பல்வேறு மாநிலத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டதால் மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் வருகையும் தற்போது குறைந்துள்ளதாலும் இந்த விமான சேவை ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையிலிருந்து டெல்லி செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது மதுரையிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமான சேவையும் வியாழக்கிழமையான நேற்று முதல் வருகின்ற மே.1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல மதுரையிலிருந்து தினமும் மாலையில் சென்னைக்கு செல்லும் தனியார் விமானமும் போதுமான பயணிகள் இல்லாததால் தனது சேவையை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
    மேலும், மதுரையிலிருந்து மும்பைக்கு செல்லும் நேரடி விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு சென்னை வழியாக சென்று மும்பை செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... World Book Day 2021 | மன்னார்குடியில் வண்ண கோலமிட்டு திருக்குறளை வாசித்து கொண்டாடிய மக்கள்

    தற்போது மதுரையிலிருந்து சென்னைக்கு 10 விமான சேவைகளும், பெங்களூருக்கு 2 பயணிகள் சேவைகளும், மும்பைக்கு 2 சேவைகளும் என மொத்தம்  14 விமான சேவைகள் இயக்கப்படுவதாக மதுரை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: