ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மூதாட்டியிடமிருந்து 20 சண்டை சேவல்கள் திருட்டு - இரண்டு இளைஞர்கள் கைது

மூதாட்டியிடமிருந்து 20 சண்டை சேவல்கள் திருட்டு - இரண்டு இளைஞர்கள் கைது

இரண்டு இளைஞர்கள் கைது

இரண்டு இளைஞர்கள் கைது

தனியாக இருந்த மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இரண்டு இளைஞர்கள் கைது - 20 சண்டை சேவல்கள் 5 நாட்டு கோழிகள் பறிமுதல்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

மதுரை அருகே மூதாட்டியிடமிருந்து, 20 சண்டை சேவல்களை திருடிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடிவேல்கரை புதுக்குளம் கால்வாய் பகுதியைச் சேர்ந்த கருத்தகண்ணன் இவரது மனைவி சுசீலா வயது(68). இந்த தம்பதியினருக்கு மூன்று  பிள்ளைகள் மூவருக்கும் திருமணமாகி தற்போது வெவ்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.

கணவர் இறப்பிற்குப்பின் சுசிலா மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்து வருகிறார். இவர் 20க்கும் மேற்பட்ட சண்டை சேவல், 5க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை தோட்டத்து வீட்டில் கூண்டில் வைத்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிகாலை எழுந்து பார்த்தபோது கூண்டில் வைக்கப்பட்டிருந்த 20 சண்டை சேவல்கள் காணாமல் போனது. வயதான சுசிலா முதலில் இது குறித்து புகார்கள் எதுவும் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் கூண்டில் இருந்த 5 கோழிகள் மாயமாகியது. இதனால், அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து தனது மகனிடம் தகவல் தெரிவித்தார்.

கடந்த 20-ஆம் தேதி நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சென்று தனது தோட்டத்து வீட்டில் வளர்த்து வந்த 20 சண்டை சேவல் மற்றும் 5 நாட்டுக்கோழிகள் அடுத்தடுத்து திருடு போனதாக புகார் அளித்தார்.

புகாரின்பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகிய காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டியிடம் கைவரிசையைக் காட்டியது அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் மாயக்கண்ணன் என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 சண்டை சேவல், 5 நாட்டுக்கோழிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read... இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 8ம் வகுப்பு பள்ளி மாணவி!

மூதாட்டி தனிமையில் வசித்து வருவதுடன் அதிக விலைக்கு விற்பனையாகும் சண்டை சேவல்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் வைத்திருந்ததால்  அவற்றை திருடி நல்ல விலைக்கு விற்று விடலாம் என்ற எண்ணத்தில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டியதாக பிடிபட்ட வாலிபர்கள் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai