• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரை அருகே குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பலி... 3 பேர் கவலைக்கிடம்

மதுரை அருகே குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பலி... 3 பேர் கவலைக்கிடம்

கோப்பு படம்

கோப்பு படம்

நீரில் மூழ்கி தத்தளித்த வாலிபர்களை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  • Share this:
    மதுரை அலங்காநல்லூர் அருகே குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து இருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் சித்திக் மற்றும் அவரது நண்பர்களான வேல்பாண்டியன், வீரபாண்டியன், முத்துப்பாண்டி என்ற ஐந்து வாலிபர்களும் அலங்காநல்லூரில் உள்ள முல்லைப் பெரியாறு பாசன கால்வாயில் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வந்துள்ளனர்.

    காலையில் குளித்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டபோது கார் அச்சம்பட்டி பகுதியில் உள்ள சிறிய குளத்தில் கார் கவிழ்ந்து நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி தத்தளித்த வாலிபர்களை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதில் அரவிந்த், மற்றும் சித்திக் என்ற இரு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் காரை ஒட்டி குட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: