Home /News /tamil-nadu /

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தகாத வார்த்தை பேசி மிரட்டியதாக புகார்- காவலர் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தகாத வார்த்தை பேசி மிரட்டியதாக புகார்- காவலர் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு

கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காவலர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காவலர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காவலர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் குறித்து கேள்வி கேட்ட நபரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கடந்த மே 1-ம் தேதி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி கிராம சபை கூட்டம் கட்ராம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. திரளி ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் என பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

    தொடர்ந்து வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற திரளி ஊராட்சி சுந்தரராஜபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்த கோட்டை திருப்பதி என்பவர் ஊராட்சியில் செய்த செலவுகளுக்கு முறையான கணக்குகள் காண்பிக்கப்படவில்லை எனவும், ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணிபுரியும் தினேஷ் என்பவர் அவருக்குப் பதிலாக வேறு ஒரு நபரை நியமித்து ஊதியத்தை மட்டும் தனது பெயரில் பெற்றுக்கொள்வதாக கூறினார். பல ஆண்டுகளாக வேலை பார்க்காத அவரை மாற்றிவிட்டு வேறு ஒரு நபரை நியமிக்க வேண்டும் என கோட்டை திருப்பதி தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட பம்ப் ஆபரேட்டர் தினேஷ் மற்றும் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றிவரும் ராஜசேகர் ஆகிய இருவரும் கோட்டை திருப்பதியிடம் ‘நீ எதற்காக அதைக் கேட்கிறாய்? உனக்கு கேட்க உரிமை இல்லை’ எனக் கூறி இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் பேசி அதன் பின்னர் கிராமசபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், கிராமசபை கூட்டத்தில் தனக்கு கேள்வி கேட்க உரிமை இல்லை எனக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டிய காவலராக பணிபுரிந்து வரும் ராஜசேகர், ‘நான் காவல் துறையில் இருக்கிறேன். உன் மீது வழக்கு போட்டு என்ன செய்கிறேன் பார்’ என மிரட்டல் விடுத்ததாக கோட்டை திருப்பதி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் தினேஷ், ராஜசேகர் ஆகிய இருவர் மீதும் புகார் அளித்தார்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சம்பவம் குறித்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், பம்ப் ஆபரேட்டர் தினேஷ் மற்றும் காவலர் ராஜசேகர் உட்பட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சிவகுமார், மதுரை.
    Published by:Archana R
    First published:

    Tags: Crime News, Madurai

    அடுத்த செய்தி