மதுரை அருகே தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி: முன்னாள் பேராசிரியர் உட்பட இருவர் கைது

மதுரை அருகே தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி செய்த முன்னாள் பேராசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அருகே தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி செய்த முன்னாள் பேராசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திரளியில் உள்ள அன்னை பாத்திமா கேடரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி பெயரில் போலியாக சமூக வலைத்தளத்தில் முகநூல் பக்கம் ஓபன் செய்து அந்த கல்லூரி பெயருக்கு வரும் மாணவர் சேர்க்கையை மாவட்டத்திலுள்ள  சிஇஓ, அல்ட்ரா உள்ளிட்ட  பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு கொடுத்து ஒரு மாணவர் சேர்க்கைக்கு 40,000 முதல் 50,000 வரை கமிஷனாக பெற்று சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

மோசடி செய்த நபர் அன்னை பாத்திமா கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் அனுப்பானடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மதுரை ஜி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சபரீசன் ஆகிய இருவரும் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து  கல்லூரி சேர்மன் ஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க.. இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 06, 2021)

மதுரை மாவட்ட காவல் எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published: