ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு மதுரையில் மரியாதை

மதுரைக்கு கொண்டு வரப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மதுரைக்கு கொண்டு வரப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  • Share this:
பீமா - கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தமிழகத்தை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கடந்த ஜூலை 5 ஆம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

Also read: "புகை சான்று இல்லாததால் ரூ.10,000 அபராதம்": மதுரையில் வாடகை வாகன ஓட்டுனருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

அவரது அஸ்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைத்து முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பல அமைப்பினரும் மரியாதை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று மதுரை வந்த அவரது அஸ்தி, விளக்குத்தூண் பகுதியில் உள்ள தூய மரியன்னை பள்ளி வளாகத்தில் உள்ள தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி குழந்தைகள், கிறிஸ்தவ அமைப்பினர் மரியாதை செய்தனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மலர் தூவி கோஷம் இட்டு மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசியவர்கள்,"ஸ்டேன் சுவாமி மீது பொய் வழக்குகளை புனைந்த என் ஐ ஏ அதிகாரிகள், அவருக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி, அவரை காப்பாற்ற முயற்சி எடுக்காத மனித உரிமை ஆணைய தலைவர்கள் ஆகியோரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பீமா - கொரேகான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 15 மனித உரிமை ஆர்வலர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேச துரோக சட்டப் பிரிவுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் அனைவரும் உடனே முறையான விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்யப்பட வேண்டும்" என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: