• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டிரான்ஸ் கிச்சன் - மதுரையில் திருநங்கைகள் துவங்கியுள்ள ஓட்டல்..!

டிரான்ஸ் கிச்சன் - மதுரையில் திருநங்கைகள் துவங்கியுள்ள ஓட்டல்..!

மதுரையில் திருநங்கைகள் திறந்த உணவகம்

மதுரையில் திருநங்கைகள் திறந்த உணவகம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிய முயற்சியாக திருநங்கைகள் திறந்துள்ள ஓட்டலுக்கு முதல் நாளே மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

  • Share this:
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிய முயற்சியாக திருநங்கைகள் திறந்துள்ள ஓட்டலுக்கு முதல் நாளே மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

திருநங்கைகள் குறித்த பாழடைந்த சமூக பிம்பங்களை உடைக்கும் வகையில், மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் புதிய உணவகம் திருநங்கைகளால் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் உணவு சமைத்தல், பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் திருநங்கைகளே ஈடுபடுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

மதுரை உலகநேரி பகுதியை சேர்ந்த இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே உணவு சமைத்து சிறிய நிகழ்வுகளுக்கு ஆர்டர்கள் வழங்கி வந்துள்ளனர். அவர்களது உணவின் சுவை விரும்பிய பலரும் அவர்களை ஓட்டல் துவங்க விருப்பம் தெரிவித்து வந்துள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, அவர்கள் எடுத்த இந்த முயற்சியை பாராட்டும் வகையில் நேற்று  இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் வந்து திறந்து வைத்தார்.

காலையில் இட்லி, பொங்கல், பூரி, தோசை, வடை காபி, டீ உள்ளிட்டவையும்,மதியம் சாப்பாடு, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன்குழம்பு, சைவ சாப்பாடு உள்ளிட்டவையும்,இரவில் சப்பாத்தி, இட்லி, தோசை, புரோட்டா உள்ளிட்டவைகளும் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.

அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே இந்த ஓட்டல் திறந்திருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருப்பதாகவும், நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவகம் குறித்து திருநங்கைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சித்ரா கூறுகையில், “இந்த உணவகத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு மூலம் அடுத்தடுத்து உணவகங்களைத் திறக்கப்படும் என்றும், அதன் மூலம் பல திருநங்கைகளின் வாழ்வாதாரம் முன்னேற்றப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருநங்கை குமுதா கூறும் போது, "இந்த ஹோட்டலை ஆரம்பிப்பதற்கு பல்வேறு வங்கிகளில் ஏறி இறங்கி கடன் கிடைக்காத ஒரு சூழ்நிலையில் ஒரு சில அமைப்புகள் முன்வந்து கடனுதவி அளித்ததாகவும், ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கியதோடு திருநங்கைகள் அமைப்பினர் சேர்த்து வைத்த பணத்தையும் சேர்த்து இந்த ஹோட்டல் ஆரம்பித்ததாகவும், தரமாகவும், சுவையாகவும் உணவு வழங்க இருப்பதாகவும், அதே போன்று  அருகே மருத்துவமனை இருப்பதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், வயது முதிர்ந்தவர்களுக்கு  இலவசமாக உணவு வழங்க இருப்பதாகவும், இந்த சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்ட நாங்கள் தன்னம்பிக்கையில் முன்னேறி காட்டுவோம்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: