Home /News /tamil-nadu /

'ஊழல் செய்வது எப்படி? பாடம் எடுக்கும் செந்தில்பாலாஜி' - பாஜக அண்ணாமலை விமர்சனம்

'ஊழல் செய்வது எப்படி? பாடம் எடுக்கும் செந்தில்பாலாஜி' - பாஜக அண்ணாமலை விமர்சனம்

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

BJP Annamalai | ஊழல் எப்படி செய்ய முடியும் என தமிழகத்துக்கு செந்தில் பாலாஜி பாடம் எடுக்கிறார் என மதுரையில் அண்ணாமலை பேட்டி

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து ஆதாரத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்ப உள்ளேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில் "மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி BGR நிறுவன பிரதிநிதியாக பேசி வருகிறார். திமுக தலைமையிலான அரசு திட்டம் போட்டு BGR நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. வேறு நிறுவனத்துக்கு திட்டம் செல்லக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக உள்ளார். கோபாலபுரம் குடும்பம் சம்பந்தப்பட்ட காரணத்தால் ஒப்பந்தம் BGR நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Also Read: பாஜகவின் இந்த விமர்சனம் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறந்த பாராட்டு.. உதயநிதி ஸ்டாலின்

    தொடர்ந்து நஷ்டம் அடைந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஊழல் எப்படி செய்ய முடியும் என தமிழகத்துக்கு செந்தில் பாலாஜி பாடம் எடுக்கிறார். இந்த ஒப்பந்தம் திமுகவின் ஊழலின் துவக்கமாக அமைந்துள்ளது. ஒரு குடும்பம் கையை காட்டும் நபர்களுக்கே திமுக ஒப்பந்தம் வழங்கப்படுகின்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணூர் திட்டம் லன்கோ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் Bell மற்றும் BGR செண்டருக்கு விண்ணப்பம் செய்தது.

    BGR நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்க கூடாது என டான்ஜெட்கோ கூறியது. டான்ஜெட்கோ எச்சரிக்கை மீறி BGR நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். BGR நிறுவனம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு நிறுவன ரெய்டை தடுத்தி நிறுத்தினார். 5 வருடங்களாக நஷ்டத்தை சந்தித்த நிறுவனம் BGR. என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என்னை கைது செய்தாலும், வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.

    Also Read: உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை.. திருப்பூர், தேனி திமுக நிர்வாகிகள் நீக்கம்

    யார் யாரெல்லாம் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர் என விரைவில் வெளியே வரும், ஊழலை பாஜக மட்டுமே தட்டி கேட்கிறது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து ஆதாரத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்ப உள்ளேன்.மேலும் செபிக்கு புகார் அனுப்ப உள்ளேன். எந்த கட்சி ஊழல் செய்தாலும் சுட்டி காட்டி நடவடிக்கை எடுப்பேன். ஊழல் அதிகரித்தால் ஜனநாயகம் இறந்து போகும் ஊழல் குறித்து முதல்வர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாஜக தேர்தலில் நேர்மையான முறையில் வந்த பணத்தை செலவு செய்கிறது. தேர்தலுக்கு வெளியே கட்சிகள் வருகிறது, பாஜக 365 நாட்களும் வேலை செய்கிறது. எனக்கு கெடு கொடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பிரம்மனா" எனக் கூறினார்.

    செய்தியாளர் : ஹரிகிருஷ்ணன் ( மதுரை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Annamalai, BJP, DMK, Senthil Balaji

    அடுத்த செய்தி